செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நீதிக் கதைகள்! நாயும் கோழியும்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

Published On :

கிராமத்தில் ஒரு வீட்டில் ஒரு நாயையும், சில கோழிகளையும் வளர்த்தனர். நாய் தேவையில்லாமல் கோழிகளை ஓடிஓடித் துரத்தியது! அதற்கு அது ஒரு விளையாட்டு! தனக்கு பயந்து கோழிகள் ஓடுவதைப் பார்த்து அதற்கு குஷியாக இருக்கும்! ஆனால் கோழிகளுக்கு இது பெருந்தொல்லையாக இருந்தது!

அடிக்கடி நாய் கோழிகளைத் துரத்துவதும், கோழிகள் படபடப்பாக பயந்து கூச்சலுடன் ஓடுவதும் வழக்கமாகி விட்டது! ஆனால் நாய் கோழிகளை ஒன்றும் செய்யாது! வெறும் பயமுறுத்தலோடு சரி! இந்த மாதிரி அடிக்கடி நடந்து கொண்டிருந்ததை எஜமானன் பார்த்துக் கொண்டிருந்தான்! கோழிகளால் நிம்மதியாக இரை இயலாததையும் பார்த்தான்!

நாயைக் கட்டிப்போட்டு விட்டான்!

ஒரு கோழி நாயிடம், "பார்த்தாயா? எங்களிடம் அநாவசியமாக வால் ஆட்டினாய்! இப்போ என்ன ஆச்சு! தண்டனையை அனுபவி!..." என்றது.

அதற்கு நாய், "இதை தண்டனை என்றா நினைக்கிறாய்? என்னுடைய எஜமானனுக்கு என் மீது ரொம்ப ஆசை! அளவு கடந்த பிரியம்! எங்கே நான் அவரை விட்டு ஓடிவிடுவேனோ என்றுதான் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறார்!" என்று பெருமைப் பட்டுக்கொண்டது நாய்!

"நல்லா சமாளிக்கறே!" என்று சிரித்துக் கொண்டே சென்றது கோழி.

"பின்னே வேறே வழி?" என்று தனக்குள் நொந்து கொண்டது நாய்.

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.