தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

இது தெரியுமா? குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து, புதிதாக முளைப்பதற்கு என்ன காரணம்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Teeth

பற்கள் - கோப்புப் படம்

Published On :

குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து, புதிதாக முளைப்பதற்கு என்ன காரணம்?

ஒரு குழந்தை கருவில் உருவாகி 6 வாரங்கள் இருக்கும்போதே பற்கள் உருவாக்கம் ஆரம்பித்துவிடும். குழந்தை பிறந்த பிறகும் இப்படி உருவாகியிருக்கும் பற்கள் வெளியே தெரியாமல் இருக்கும்.

சில காலம் கழித்து சற்றே இந்தப் பற்கள் வெளியே தோன்ற ஆரம்பிக்கும். இப்படி வரும் பற்களைத்தான் பால் பற்கள் (Milky Teeth)  என்று அழைப்பார்கள்.

இந்தப் பற்களின் பயன்பாடு கொஞ்ச காலத்துக்குத்தான். குழந்தைகளின் தாடை வளர்ச்சிக்கும் வாயின் வளர்ச்சிக்கும் (குழந்தைக்குப் பின்னால் வரப்போகும் பற்களுக்கான இடத்தை முன்பதிவு செய்து வைப்பதற்கு) இந்தப் பால் பற்கள் உதவுகின்றன.

இவற்றின் பயன்பாடு குழந்தை வாயில் கிடைக்கும் உணவைச் சுவைப்பதற்கும் பயன்படுகிறது. குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக பற்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளும். இந்தக் கற்கும் நிலை குழந்தையின் 6வது வயது வரை தொடரும்.

இந்தப் பால் பற்களுக்கு அவ்வளவாக வேர் இருக்காது. இந்தப் பற்களின் அடிப்பாகத்தில் புதிய பற்களுக்கான குருத்துகளும் ஏற்கனவே இருக்கும். இது இயற்கையின் அதிசயம்.
இந்தப் பால் பற்களின் பயன்பாடு குழந்தையின் 6 வயதுக்குள் முடிந்து விடுவதால், புதிய பற்கள் தோன்றி நன்றாக வேர் விட்டு வளர ஆரம்பிக்கும். இதனால் பால் பற்கள் விழுந்து விடுகின்றன.

Summary

Regarding rare information that children should know...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.