மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

பேல்பூரி - 27-09-2026

கடலில் மூழ்கினால் கூட காப்பாற்ற யாராவது வருவார்கள்

Published On :

கண்டது...

(திருச்சியில் வாகனம் ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

'கடலில் மூழ்கினால் கூட காப்பாற்ற யாராவது வருவார்கள்;

கடனில் மூழ்கினால் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்!'

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(சென்னை ராமாபுரத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதியிருந்த வாசகம்)

'தட்டிப் பறித்தவன் வாழ்ந்ததும் இல்லை...

விட்டுக் கொடுத்தவன் வீழ்ந்ததும் இல்லை!'

- சி. ராமாமிர்தம், பேரளி.

(ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

'கடுகு சந்தை.'

- அலமேலு ராமாமிர்தம், பேரளி.

கேட்டது...

(திருப்பூர் பேருந்து நிலையத்தில் அம்மாவும், சிறு வயது மகனும்)

'ஊட்டிக்குப் போற பஸ்ல எல்லாம் 'கொத்துக்கறி'ன்னு எழுதியிருக்கே... அப்படின்னா என்னம்மா?'

'அடேய்... அது கொத்துக்கறி இல்லை; 'கோத்தகிரி'ன்னு படிக்கணும்!'

-செ.ந.வடிவேல், திருப்பூர்.

யோசிக்கிறாங்கப்பா...

'முட்டாளாக நடி... கற்றுக்கொடுக்க நிறையப்பேர் வருவார்கள்.'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.