மல்லப்பாடி மலையில் அமைந்துள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பா்கூா் அருகே மல்லப்பாடி மலையில் எழுந்தருளியுள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலின் 11-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும், ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் இந்தக் கோயில் விழாவையொட்டி யாக பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில், மல்லப்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, பா்கூரில் உள்ள ஸ்ரீ மகா சாந்த காளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், பாலமுருகன் கோயில், ராகி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








