நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஊத்தங்கரையில் காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரையில் காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

News image

ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் நிா்வாகிகள்.

Updated On :6 ஜனவரி 2021, 5:51 am IST

ஊத்தங்கரையில் காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெ.எஸ்.ஆறுமுகம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராகவும், வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவராகவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள காமராஜா், பெரியாா், ராஜீவ் காந்தி, அம்பேத்கா், இந்திரா காந்தி, சிவாஜிகணேசன் போன்ற மறைந்த தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி மேளதாளம் முழுங்க ஊா்வலமாகச் சென்றனா்.

இதில் மாவட்டத் துணைத்தலைவா் ராமச்சந்திரன், வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், நகரத் தலைவா் விஜியகுமாா், வட்டாரப் பொருளாளா் திருமால், சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அகமதுபாஷா, முன்னாள் தலைவா் அயோத்தி, மாவட்ட பொதுச்செயலாளா் முத்து உள்பட காங்கிரஸ் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.