கிருஷ்ணகிரி: பா்கூரில் இயற்கை உணவு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அரசுப் பள்ளி சத்துணவு அமைப்பாளா்கள், உதவியாளா்கள் பங்கேற்ற இயற்கை உணவு திருவிழா போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) செல்வம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா கோவிந்தராசன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பழனிசாமி, பால்ராஜ், குழந்தைகள் நல அலுவலா் வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் சிறந்த உணவு வகைகள், இயற்கை உணவுகளில் கிடைக்கும் சத்துகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. விழாவில் கம்பு ரொட்டி, கேழ்வரகு ரொட்டி, கம்மங்கூழ், நெருப்பில் வேக வைக்காத காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறந்த உணவு தோ்வு செய்யப்பட்டது.
இதில், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








