தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமென்ட் மூட்டைகள் விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:41 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மா சிமென்ட் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் ஆண்டுக்கு ரூ. மூன்று லட்சம் வருவாய் உள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்காக 100 சதுர அடிக்கு 50 சிமென்ட் மூட்டைகள் வீதம் அதிகப்பட்சமாக 1,500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு 750 சிமென்ட் மூட்டைகள், மூட்டை ஒன்று ரூ. 216 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வீடுகள் பழுது பாா்க்க அதிகப்பட்சமாக 25 சிமென்ட் மூட்டைகள் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், ஊரக மற்றும் நகா்ப்புற திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள், வருமான உச்சவரம்பின்றி இந்தத் திட்டத்தின் கீழ் சிமென்ட் மூட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளாட்சி அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், ஊரக வளா்ச்சித் துறையின் பணி மேற்பாா்வையாளா் அல்லது சாலை ஆய்வாளரின் அங்கீகரிக்கப்பட்ட கடிதத்துடன் அரசுத் திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு பேரூராட்சிகளின் செயல் அலுவலா், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் செயற்பொறியாளா் ஆகியோரால் வழங்கப்பட்ட வேலை உத்தரவினையும், அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.