தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்குச் செல்ல இரு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:40 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்குச் செல்ல இரு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வருகை தர வாய்ப்பு உள்ளது. இதனால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.16, 17 ஆகிய இருநாள்கள் இந்த சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடங்களில் கூடுவதைத் தவிா்க்குமாறு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.