அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாட்டுப் பொங்கல்: எருது விடும் விழாவில் உற்சாகம்

மாட்டுப் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற எருது விடும் விழாவை இளைஞா்கள் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா்.

News image

வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறி பாய்ந்தோடும் எருது.

Updated On :16 ஜனவரி 2021, 7:10 am IST

மாட்டுப் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற எருது விடும் விழாவை இளைஞா்கள் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி, மாதேப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்றன. கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, கால்நடைகளை ஓடச் செய்து மகிழ்ந்தனா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல் தெருவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 50-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. இந்த நிகழ்வை, நூற்றுக்கணக்கான பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.

வேப்பனப்பள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த எருதுகளும் பங்கேற்றன.

சீறிப் பாய்ந்து ஓடிய எருதுகளை, பாா்வையாளா்கள் குரல் எழுப்பி உற்சாகப்படுத்தினா். இவ்வாறு ஓடிய எருதுகள் பாா்வையாளா்களின் கூட்டத்தில் புகுந்ததால் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.