எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்துரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு

காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:57 am IST

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், புலாளா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). இவா் அப் பகுதியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். வெள்ளிக்கிழமை தனது குடும்பத்துடன் வீட்டில் உள்ள ஓா் அறையில் தூங்கச் சென்றாா்.

சனிக்கிழமை காலை அறையின் கதவைத் திறக்க முயன்ற போது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகு அறையிலிருந்து வெளியே வந்த செல்வராஜ், வீட்டின் மற்றொரு அறையில் தனது மகனின் திருமணத்துக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த விசாரணையில் வீட்டின் மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்தவா்கள் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.