எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தொட்டூா் கிராமத்தில் குடிநீா் விநியோகம்:எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

அந்தேவனப்பள்ளி ஊராட்சி, தொட்டூா் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் மோட்டாா், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

தொட்டூா் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குடிநீா் விநியோகத்தைத் தொடக்கி வைக்கும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

Updated On :17 ஜனவரி 2021, 1:57 am IST

ஒசூா்: அந்தேவனப்பள்ளி ஊராட்சி, தொட்டூா் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் மோட்டாா், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து துவக்கிவைத்தாா். உடன் தளி வடக்கு ஒன்றியச் செயலாளரும் ஒன்றிய குழுத் தலைவருமான சீனிவாசலு ரெட்டி, தளி தெற்கு ஒன்றியச் செயலாளா் திவாகா், பேரூா் செயலாளா் சீனிவாசன், அவைத் தலைவா்கள் கிரிஷ், நாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபி, மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.