சென்னை, ஜுன் 25: திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.கே. பாலன் தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை சம்பந்தமாக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்: முதல்வர் கருணாநிதி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.கே. பாலன் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வாக்கிங் சென்றபோது காணாமல் போனார். அப்படியே தூக்கி ஒரு காரில் போட்டுக் கொண்டு போனார்கள். தேடித்தேடி பார்த்தோம். சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என்று அன்றைய ஆட்சியாளர்களைக் கேட்டோம். எம்.கே. பாலன் திடகாத்திரமானவர். நல்ல உயரமானவர். அவரைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இதுவரையில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இப்படியும் இந்த நாட்டிலே மிகச்சாதுர்யமாக தவறு செய்கின்ற கொடியவர்கள் இருக்கிறார்கள். சேகர்பாபு (அதிமுக): முதல்வர் கருணாநிதி அவைக்கு தவறான தகவல்களைத் தந்துள்ளார். எம்.கே. பாலன் காணமால்போன வழக்கு அதிமுக ஆட்சியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி: குற்றவாளிகள் கிடைத்தார்கள். தண்டனையும் கிடைத்திருக்கலாம். எம்.கே. பாலன் உடல் கிடைக்கவில்லை. சேகர்பாபு (அதிமுக): எம்.கே. பாலனின் உடல் வியாசர்பாடி இடுகாட்டில் எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலேசியாவில் சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை!

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

2.6.1976: கோயில்களில் நியமன டிரஸ்டிகள் பதவி இழப்பு - கணக்கை ஒப்படைக்க உத்தரவு

தொப்பூா் கணவாய் பகுதியில் தற்காலிக சாலைகளை மேம்படுத்தி பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


