

சென்னை, ஜன.9: 6-ம் கட்டமாக மேலும் 10 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இதுவரை ஐந்து கட்டங்களில் 1 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை ஏறத்தாழ 1 கோடியே 52 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் வழங்கப்படுவதற்காக கூடுதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தேவை என அளித்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, இதுவரை வழங்கப்படாமல் உள்ள தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கிட நடப்பாண்டில் ஆறாம் கட்டமாக மேலும் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.