ஏற்காடு அருகே இரவுக் காவலாளி மர்ம மரணம்
ஏற்காடு, நவ.26: ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்த இரவுக்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வெள்ளையன்(வயது 60) என்ற இவர், வெள்ளக்கடை கிராமத்துக்கு அருகில் உள்ள மோட்


ஏற்காடு, நவ.26: ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்த இரவுக்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வெள்ளையன்(வயது 60) என்ற இவர், வெள்ளக்கடை கிராமத்துக்கு அருகில் உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் இரு தினங்களுக்கு முன், 24ம் தேதி இரவு வேலைக்குச் சென்றார். அதன்பின் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இந்நிலையில் அவர் வேலை பார்த்த தோட்டத்துக்கு அருகே பாலத்துக்கு அடியில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...