புதுதில்லி, செப்.5: நீதிபதி செளமித்ர சென்னை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் குறிப்பிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிபதி செளமித்ர சென்னை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் நீதிபதி பதவியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டார். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவரும் ஏற்றுக் கொண்டநிலையில் மக்களவையிலும் அதுபோன்ற தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமா என்பது தொடர்பாக அரசுப் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மீரா குமார் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே சென் ஏற்கனவே பதவி விலகிவிட்டதால் அவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் ஒருவர் சூசகமாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








