47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீர்காழியில் நகை வியாபாரியிடம் 12.5 கிலோ தங்கம் கொள்ளை

மயிலாடுதுறை, செப்.28: சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து 12.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் பவன் குமார் ஜெயின். இவர் ஒரு தங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:38 am

சங்கர்

மயிலாடுதுறை, செப்.28: சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து 12.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் பவன் குமார் ஜெயின். இவர் ஒரு தங்க வியாபாரி. இவர் நேற்று இரவு சீர்காழி அருகே பைபாஸ் சாலையில் கார் ஓட்டியபடி சென்றபோது, பாதரக்குடி என்ற இடத்தில் இவரைப் பிந்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், இவரது காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து 12.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனராம். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடந்துள்ளது. போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.