2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மணல் கடத்தல் : உடந்தையாக இருந்த எஸ்.ஐ. உட்பட 11 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.7: ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 டிராக்ட

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:40 am

கே.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.7: ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 டிராக்டர்கள், ஒரு ஜேசிபி இயந்திரம், ஒரு மொபெட், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக ஸ்ரீவி. காவல் ஆய்வாளர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் செவ்வாய்க்கிழமை அதிகலை அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி பகுதிக்கு தனியார் டாக்ஸி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோதனைக்குச் சென்றுள்ளார். அவர், குறிப்பிட்ட ஸ்ரீவி ஆதி திராவிட நல விடுதிக்குச் சென்றபோது, மணல் கடத்தல்காரர்களுடன் நத்தம்பட்டி சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் பெஞ்சில் அமர்ந்து  கொண்டு இருந்தது தெரியவந்தது. சற்று தொலைவில் இருந்த அவரது வாக்கி டாக்கியை விடுதி மாணவர்கள் சென்று எடுத்து விளையாடியதும், அவர் இருந்த மோசமான நிலையையும் கண்ட சக்திவேலுக்கு பகீர் என்று இருந்ததாம்.

மேலும், அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் மிஸ்டு கால் கொடுத்தால் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டு, அவரவர் இடத்துக்கு மறைந்துவிடுவார்களாம்.

இவற்றையெல்லாம் கண்டுபிடித்த சக்திவேல், அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய ஏற்பாடு செய்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் இந்த மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது, இது எங்க ஏரியா உள்ள வராத என்று விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலரை மணல் லாரி ஏற்றிக் கொல்ல முயற்சியும் நடந்துள்ளது. இதை அடுத்து விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர் உள்பட, 10 பேரைக் கைது செய்தனர். மேலும் 5 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.