ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மணப்பாறையில் கடையடைப்பு உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி, ஆக., 24 : புதிதாக இயக்கப்பட்டுள்ள திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி  மணப்பாறைப் பகுதியில் இன்று ஒர

Updated On :26 செப்டம்பர் 2012, 5:59 am

திருச்சி, ஆக., 24 : புதிதாக இயக்கப்பட்டுள்ள திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி  மணப்பாறைப் பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

மணப்பாறையில் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து அனைத்துக் கட்சி போராட்டக் குழுவை உருவாக்கினர். இவர்கள், கடந்த வாரம் முதல், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், அமைச்சர், ரயில்வே துறை அதிகாரிகள் என அனைவருக்கும் கடிதமும், கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.

இந்நிலையில் இன்று மணப்பாறை பகுதி முழுவதும் 100 சதவீத கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது.மணப்பாறை பகுதியில் ஆட்டோ, டாக்ஸி என எதுவும் ஓடவில்லை. மணப்பாறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.