சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஊராட்சித் தலைவர் கடத்தல் : பொது மக்கள் சாலை மறியல்

திண்டுக்கல், ஆக. 25: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் சரகம் பி.கொசவபட்டியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கடத்தப்பட்டதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து பொது மக்கள், உறவினர்கள் திடீர் சாலை மறி

Updated On :26 செப்டம்பர் 2012, 6:01 am

திண்டுக்கல், ஆக. 25: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் சரகம் பி.கொசவபட்டியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கடத்தப்பட்டதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து பொது மக்கள், உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடமதுரை காவல் சரகம் பி.கொசவபட்டி ஊராட்சித் தலைவராக இருந்து வருபவர் எட்டிகுளத்துப்பட்டியைச் சேர்ந்த சிவசுப்ரமணி (39). இவர் இப்பகுதியின் அதிமுக பொருளாளராகவும் இருந்து வருகிறார். வெள்ளிக்கிழமை திண்டுக்கல் சென்றுவருவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வீடு திரும்பவில்லையாம். அவரது இரு சக்கர வாகனம் மற்றும் காலணி கொசவபட்டி-பாடியூர் சாலையில் கிடந்ததைக் கண்டு அவரது மனைவி சத்தியபாமா வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லாததைத்தொடர்ந்து உறவினர்களும், ஊர் மக்களும் திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.