/

தொழிற்பயிற்சி பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2012, 9:42 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 மாத கால தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையம், மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அடிப்படை எலக்ட்ரிக்கல், டர்னர், வெல்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

 கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், கண் பார்வையற்றோர், செவித்திறன் குறைவுடையோர், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், 5–ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த மாற்றுத்திறனாளிகள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

  பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகலுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதம் தோறும் ரூ.1000 பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் தெரிவித்து உள்ளார்.

 எனவே, இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு தொடங்காதவர்கள் உடனடியாக அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட்டுக்கணக்கு தொடங்கி கணக்கு எண்ணை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு வங்கியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.