கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

10-ம் வகுப்பு முடித்து திறந்த வெளிப்பல்கலையில் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, பதவிஉயர்விற்கு அங்கீகரித்து அரசாணை

பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பிற்கு பின் தொலைதூரக்கல்வி இயக்ககம் மற்றும் திறந்தவெளிப் பல்கலை மூலம் பட்டம் பெற்றவர்கள், மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்,

News image
Updated On :21 டிசம்பர் 2012, 1:40 pm

ஜி.சுந்தரராஜன்

பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பிற்கு பின் தொலைதூரக்கல்வி இயக்ககம் மற்றும் திறந்தவெளிப் பல்கலை மூலம் பட்டம் பெற்றவர்கள், மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு, பதவி உயர்விற்கு அங்கீகரித்து அரசாணையினை டிச.18-ம் தேதி தமிழகஅரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா சர்மா வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பிற்கு பின் மூன்றாண்டு பட்டயப் படிப்பு அல்லது 2-ம் ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி, பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், 10 வகுப்பிற்கு பின் மூன்றாண்டு பட்டயப் படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் 11-ம் வகுப்பிற்கு (Old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரிய பட்டயப் படிப்பு படித்த பிறகு மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோரை மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு அங்கரித்து தமிழக உயர்கல்வித்துறை கடந்த டிச.18-ம் தேதி அரசாணை (எண்: 242/18-12-2012) பிறப்பித்துள்ளது.

இணையான தகுதி பெற்றவர்கள் விபரம்: (1)- பத்தாம் வகுப்பிற்கு பின்பு மூன்றாண்டு பட்டயப்படிப்பு பின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம/ தொலைதூரக்கல்வி நிறுவனம் மூலம் மற்றும் கல்லூரிகள் மூலம் பெறப்பட்ட பட்டப்படிப்பு (10+3+3). (2)- பதினோராம் வகுப்பு (Old SSLC) பின்பு அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்ட இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு, பிறகு தொலைதூரக்கல்வி நிறுவனம் மூலம் இளங்கலை (Open University) பட்டப்படிப்பு (11+2+3), (3)- பத்தாம் வகுப்பு, பிறகு இரண்டாண்டு தொழில்நுட்ப பயிற்சி (ITI), பின்னர் தொலைதூரக்கல்வி நிறுவனம் மூலம் இளங்கலை பட்டப்படிப்பு (10+2+3); பத்தாம் வகுப்பு, மூன்றாண்டடு பட்டயப்படிப்பு பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பு (Lateral Entry) (10+3+2) படித்தவர்களை 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்த பிறகு 3 வருட இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு பெற அங்கீகரித்து ஆணையிடப்பட்டுள்ளது. ஆணையின் நகல் அனைத்து தலைமைச்செயலக துறைகள், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளரின் தனிச்செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.