சிதம்பரம் அருகே புவனகிரி வெள்ளாற்று பாலத்தை சீரமைக்க கோரி வர்த்தகர்சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் புவனகிரியில் இன்று கடை அடைப்பு நடைபெற்றது. மேலும் புவனகிரி எம்ஜிஆர் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புவனகிரியில் வெள்ளாற்றில் குறுக்கே உள்ள மிகவும் பழமை வாய்ந்த பாலம் சேதமுற்று போக்குவரத்திற்கு லாயக்கற்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தகர்சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் புவனகிரியில் இன்று கடைஅடைப்பு நடத்தப்பட்டது.
மேலும் புவனகிரி எம்ஜிஆர் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு இயக்க சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைபிரிவு செயலாளர் கே.ஜி.குமார், பாரதி பேரவை பேராசிரியர் தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். வர்த்தக சங்க செயலாளர் ஏ.சி.பி.ரத்தினசுப்பிரமணியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கச் செயலாளர் பூராளன், ஏ.எஸ்.மதியழகன் (திமுக), சதானந்தம் (மார்க்கிஸ்ட் கம்யூ), செல்வராஜ் (காங்கிரஸ்), பிரபு (பாமக) உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.