2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்- லாரி மோதல்: 4 பேர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.24: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியாயினர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:19 pm

கே.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.24: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியாயினர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கொம்பைச் சேர்ந்த சிலர் ராஜபாளையம் அருகே உள்ள செம்பட்டி ஐயனார் கோவிலுக்கு 2 லாரிகள் மற்றும் ஒரு காரில் வியாழன் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை பாலக்கொம்பையைச் சேர்ந்த காளிராஜ் (29) ஓட்டி வந்தார். இவர்கள் மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமியாபுரம் விலக்கில் வந்தது. அப்போது, எதிரே ராஜபாளையத்தில் இருந்து கோயமுத்தூருக்கு கழிவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக காரும் லாரியும் மோதின. இதில், பாலக்கொம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா (90) செல்வம் மகன் கணேசன் (12), கணேசன் மகள் நித்தியா (17) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த டிரைவர் காளிராஜ் உள்பட 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் காளிராஜ் மதுரை பொதுமருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.