தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்
புதுச்சேரி, ஜன.18: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்தபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார். தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (48),மரம் ஏறும் தொழிலா


புதுச்சேரி, ஜன.18: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்தபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (48),மரம் ஏறும் தொழிலாளி. கடந்த 14-ம் தேதி அவரது வீடு அருகே இருந்த தென்னந்தோப்பில் உள்ள மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...