மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொன்னேரியில் பலசரக்கு கடையின் ஜன்னலை நீக்கி 50ஆயிரம் திருட்டு

பொன்னேரி, ஜன. 27: பொன்னேரியில் உள்ள பலசரக்கு கடையின் ஜன்னலை நீக்கி 50ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை பொன்னேரி போலீஸôர் தேடி வருகின்றனர். பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:49 pm

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

பொன்னேரி, ஜன. 27: பொன்னேரியில் உள்ள பலசரக்கு கடையின் ஜன்னலை நீக்கி 50ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை பொன்னேரி போலீஸôர் தேடி வருகின்றனர். பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள முருகன் டிபார்மெண்ட் ஸ்டோர்ஸ் (பலசரக்கு கடை). இரண்டு மாடி கட்டடத்தில் அமைந்துள்ளது. இந்த கடையின் தரைதளத்தில் மளிகை பொருட்களும்,  முதல் தளத்தில் அழகு சாதன பொருóட்களும்,  இரண்டாவது தளத்தில் சரக்குகளை வைக்கும் கிடங்கும் உள்ளது. வியாழக்கிழமை இரவு  பலசரக்கு கடையின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜன்னல் கம்பிகளை நீக்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள வாட்ச் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு தரை தளத்தில் உள்ள பணப் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ50ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.  வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த கடையின் உரிமையாளர்கள் சரவணக்குமார், சிவக்குமார் ஆகியோருக்கு கடையில் இருந்த பணப்பெட்டியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.  இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் திருட்டு சம்பவம் நடைபெற்ற கடைக்கு சென்று விசாரணை செய்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸôர் வழக்கு பதிவு செய்து பலசரக்கு கடையில் திருடிய  நபர்களை தேடி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.