ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கிருஷ்ணகிரி, ஜூலை 30: ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் தீக்ஷித் வீட்டில் இன்று காலை 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்ளச் சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருப்பதால் சோதனை மேற்கொள்ள வந்த அத


கிருஷ்ணகிரி, ஜூலை 30: ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் தீக்ஷித் வீட்டில் இன்று காலை 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்ளச் சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருப்பதால் சோதனை மேற்கொள்ள வந்த அதிகாரிகள் வீட்டுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.
அபிஷேக் தீக்ஷித் முன்னர் கிருஷ்ணகிரி எஸ்.பி, யாக பணியாற்றியவர். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதை அடுத்தே லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனராம். மேலும், நாக்பூரில் உள்ள அவரது வீட்டிலும் மத்திய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பர்கூர் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வீட்டில் சோதனை மேர்கொள்ளப்பட்டுள்ளது. இவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத தங்கம் அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இங்கும் சோதனை நடந்துவருவதால், முழுத் தகவலும் இனிமேல்தான் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...