திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை பறிமுதல்

ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியம் களிமண் குன்று கிராமம்  வைரவன் என்பவர் ஏப்ரல் 24-ம் தேதி வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று கிடைத்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:02 am

ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியம் களிமண் குன்று கிராமம்  வைரவன் என்பவர் ஏப்ரல் 24-ம் தேதி வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. இதை அவர் யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இந்த நிலையில் அவருடன் அஸ்திவாரம் தோண்டிய செல்லப்பா என்பவருக்கு திடீரென அம்மை போட்டுள்ளது.

இதனால் அவர் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து விஏஓ பாலையாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன்பேரில்

வட்டாட்சியர் அன்புநாதன், துணை வட்டாட்சியர் தமீம், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிலையை மீட்டு தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர்.

ஒன்றரை அடி உயரமுள்ள அந்த சிலையின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.