சாலை விபத்து- பைக் மீது லாரி மோதி விவசாயி மரணம்
கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் பைக் மீது லாரி மோதியதில் செதில்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமதாஸ்(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் பைக் மீது லாரி மோதியதில் செதில்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமதாஸ்(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் மகன் ராமதாஸ். விவசாயியான இவர் கும்மிடிப்பூண்டிக்கு வேலை விஷயமாக வந்து வீட்டிற்கு திரும்பினார்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வீட்டிற்கு செல்ல பெத்திக்குப்பம் மேம்பாலம் வழியே வந்த போது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் ராமதாஸின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...