டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கவரப்பேட்டை: காய்கறி கடையில் பட்டாசுகள் பெட்டிகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் காய்கறி கடையில் விற்கப்பட்டு வந்த

News image
Updated On :11 நவம்பர் 2012, 2:07 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் காய்கறி கடையில் விற்கப்பட்டு வந்த பட்டாசுகளை கவரப்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அனுமதி இன்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் பட்டாசுகளை விற்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் போலீஸார் பட்டாசு கடைகளை சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பஜாரில் கவரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தலைமை காவலர் பரந்தாமன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு போது காய்கறி கடை ஒன்றில் பட்டாசுகள் விற்கப்பட்டதை கண்டு கடையை சோதனையிட்டார்.

இந்த சோதனையில் 20 பெட்டியில் பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கவரப்பேட்டை ஆர்.எஸ்.சாலையை சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மகன் சேசுதுரை(34) கவரப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதியப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.