பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பி.கொசவபட்டியைச் சேர்ந்த கதிர்வேலின் (48) மகள் ராதா (19). இவர் தாமரைப்பாடியில் உள்ள பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி.மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் வேடசந்தூர் வட்டம், வடமதுரை காவல் சரகம், பாடியூர் பி.கொசவபட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை தனது வீட்டில் ராதா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். மகளின் சடலத்தைப் பார்க்க ராமதாஸின் குடும்பத்தினர் கதிர்வேலை அனுமதிக்க மறுத்து விட்டனராம். இதனால் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக வடமதுரை காவல் நிலையத்தில் கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமான 4 மாதங்களிலேயே பெண் இறந்து போனது குறித்து பழனி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

