எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடிப்பு

காவல்நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர் வீடு திரும்பாததால் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் லேசாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

News image
Updated On :23 நவம்பர் 2012, 9:29 am

செல்வ முத்துகுமாரசாமி

காவல்நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர் வீடு திரும்பாததால் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் லேசாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமு என்கிற ராதாகிருஷ்ணன். இவர் மது வியாபாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களை செய்துவருகிறார். இவர் மீது தமிழக போலீஸார் பல்வேறு வழக்குள் பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.  உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனை ஜாமீனில் கடந்த வாரம் வெளிவந்தார்.

தினமும் நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் கைழுத்திடவேண்டுமென்ற நிபந்தனைப்படி வியாழக்கிழமை சென்ற அவர், காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்த பிறகு வீட்டுக்கு வரவில்லை. இதுதொடர்பாக தமது கணவர் கடத்தப்பட்டுவிட்டதாக அவரது மனைவி எழிலரசி, நாகப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை போலீஸார் வாங்கவில்லையென கூறப்படுகிறது. இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி, ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மற்றும் அவரது தொழில் நிறுவன ஊழியர்கள் திரண்டு, காரைக்கால் அரசலாறு பாலம் அருகே வெள்ளிக்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு காரைக்கால் அதிமுக நகர செயலர் ஜி.வி.ஜெயபால் தலைமை வகித்தார். சிறிது நேரம் மறியல் நடத்திவிட்டு கலைந்துசெல்லுமாறு அவரிடம் அறிவுறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டதால், ஆதரவாளர்களும் சாலையில் அமர்ந்தனர். இதனால் காரைக்கால்  - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகரக் காவல்நிலைய ஆய்வாளர் சிவானந்தம், உதவி ஆய்வாளர்கள் அறிவுச்செல்வன், லோகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுநடத்தினர். தொடர்ந்து போராட்டம் கைவிடாமல் போகவே, ஜி.வி.ஜெயபால் உள்ளிட்ட 50 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். மற்றவர்கள் சாலையைவிட்டு ஓரமாக செல்லாமல் அமர்ந்திருந்ததால்  அவர்களை கலையும்படி போலீஸார் கூறினர். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடற்கரை சாலையிலும், நேரு வீதியிலும், காமராஜர் சாலையிலும் ஓடஓட போலீஸார் விரட்டினர்.

மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.ஆண்டோ அல்போன்ஸ் கூறும்போது, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதுபோன்று திடீரென மறியல் நடத்தி போகுக்குவரத்து பாதிக்கப்படும்போது, கைது நடவடிக்கை எடுக்கவேண்டி வருகிறது. மக்கள் பாதிக்கும் வகையில் இதுபோன்ற போராட்டம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது நிச்சயம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.