காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு
காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோவிலில் திங்கள் இரவு 1008 சங்காபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது.


காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோவிலில் திங்கள் இரவு 1008 சங்காபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது.
கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு சிவ தலங்களில் சிவலிங்கத்திற்கு சங்காபிஷேகம் நடத்தப்படும் வழக்கம் இருந்துவருகிறது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவிலில்களில் 1008 அல்லது 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
கார்த்திகை சோமவாரத்தின் 2-வது வாரமான திங்கள்கிழமை மாலை காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடுகளாக பூஜைகள் நடைபெற்றது. மூலஸ்தானத்தின் முன்பாக 1008 சங்குகள் வரிசைப்படுத்தப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பட்டது.
நீரை புனிதமாக்கும் வகையில் சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியாகள் நடத்தினர். தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டு, பிரதான சங்கு மற்றும் கலசம் கோவில் பிரகாரம் கொண்டு சென்று சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
இதைபோன்று காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...