புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுதி ஈமு பார்ம் நிர்வாக இயக்குனர் உள்பட இருவர் கைது

ஈமு கோழி பண்ணை மோசடி தொடர்பாக, ரூ. 10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொதுமக்களிடம் இருந்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,  ஈரோடு பகுதி சுதி ஈமு ஃபார்ம் நிர்வாக இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :5 அக்டோபர் 2012, 5:18 am

ஜபலின் ஜான்

ஈமு கோழி பண்ணை மோசடி தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,  ஈரோடு பகுதி சுதி ஈமு ஃபார்ம் நிர்வாக இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை எம்.ஜி.ஆர்.சிலை அருகே வைத்து அவர்களைக் கைது செய்தனர்.

சென்னிமலையைச் சேர்ந்த கே.எஸ்.தமிழ்நேசன் (28) என்பவர் இதன் நிர்வாக இயக்குநர். இந்நிறுவனத்தின் பங்குதாரர் வாசு (42) இவர் ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்

இந்நிறுவனத்தில் 171 பேர் முதலீடு செய்துள்ளனர். அவர்களில் 42 பேருக்கு முழுப் பணத்தையும் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள முதலீட்டாளர்களுக்கு ரூ.2கோடியே12 லட்சம் பணம் தரவேண்டியுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்துக்குரிய நாலரை ஏக்கர் நிலம், 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், முக்கிய எதிரியாகக் கருதப்படும் சேலம் சங்ககிரி அக்கம்மாபேட்டையைச் சேர்ந்த யுவராஜ் என்பவரைத் தேடிவருகின்றனர். இவர்தான் பணம் வசூல் செய்து கொடுத்தவர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 ஈமு கோழி நிறுவனங்கள் மீது புகார் வந்துள்ளது. இது தொடர்பாக 4000 பேருக்கு மேல் புகார் கொடுத்துள்ளனர். ரூ.250 கோடிக்கு மேல் மோசடிப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.