செம்மண் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் ரத்து ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை போலீஸார் கைது செய்வதற்காக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர் தலைமறைவானார். செஞ்சியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அவர் இன்று காலை செஞ்சியில் துண்டுப் பிரசுரம் கொடுக்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதன் பின்னர் 10.45க்கு விழுப்புரம் வந்தார். அவரை போலீஸார் சூழ்ந்து கொண்டனர். இருப்பினும் கூட்டத்துடன் திமுக அலுவலகம் வந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்ய உள்ளதாகக் கூறினர். ஆனால், அவர் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும், வீட்டுக்கு வந்து கைது செய்து கொள்ளுமாறும் கூறினார். அதை அடுத்து, அவர் வீட்டுக்கு சென்றார். அங்கே செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க முற்பட்டனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக அரசு பொய் வழக்கு போடுகிறது என்று கூறினார்.
அதன்பின்னர் 12 மணி அளவில் வீட்டுக்கு உள்ளே போலீஸார் சென்று, அவரைக் கைது செய்ய முயன்றனர். பின்னர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் 12.40க்கு போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பொன்முடி மீது கடந்த மாதம் 24ம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடைய மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


