ஹோர்முஸ் நீரிணை முழுவதும் திறக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இன்றோ நாளையோ கையெழுத்தாகும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் இருபுறமும் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன.
இதைத் தொடர்ந்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அன்று, ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹோர்முஸ் நீரிணை முழுவதும் திறக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இன்றோ நாளையோ கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக இன்று (ஆகஸ்ட் 4) திறக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
US Treasury Secretary Scott Bessent has stated that an agreement to fully open the Strait of Hormuz will be signed either today or tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!
ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது! டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது: டொனால்ட் டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple


