புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

என்னை நீக்கியதில் மன வருத்தம் இல்லை: நித்யானந்தா

மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியதால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்று நித்யானந்தர் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

News image
Updated On :19 அக்டோபர் 2012, 6:37 pm

சரவண பெருமாள்

மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியதால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்று நித்யானந்தர் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக கடந்த 2011ம் ஆண்டு நித்யானந்தர் நியமிக்கப்பட்டார். இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து நித்யானந்தரை நீக்கிவிட்டதாக மதுரையில் ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். மேலும், நித்யானந்தாவின் சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தர், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு செய்தியாளர்களிடம் கூறியது:

"மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் என்ற தகவல் நீங்கள் (செய்தியாளர்கள்) சொல்லித்தான் எனக்கே தெரியும். இதனால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. இரண்டொரு நாளில் நானே விலகிவிடலாம் என்றுதான் முடிவெடுத்து இருந்தேன். இது நானாகத் தேடிச் சென்ற பதவி இல்லை. ஆதீனமே கொடுத்த பொறுப்பு.

என்னால் ஏதும் சங்கடம் ஏற்படுமேயானால் நானே விலகிவிடுகிறேன் என்று ஏற்கெனவே நான் சன்னிதானத்திடம் (ஆதீனம் அருணகிரிநாதர்) தெரிவித்திருந்தேன். நான் கையெழுத்திட்டால் விலகல். அவர் (ஆதீனம்) கையெழுத்திட்டால் நீக்கம். இது வெறும் நடைமுறைதான்” என்றார் நித்யானந்தர்.

பதவி நீக்கத்தால் உங்களுக்கு ஏதேனும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, திருஞானசம்பந்தர் மீதும், மதுரை மீனாட்சி அம்மன் மீதும் எனக்கிருந்த பக்தியால் நான் செய்த சிறு, சிறு சேவையாகக் கருதுகிறேன். இதனால் எனக்கு எந்த பொருளாதார இழப்பும் இல்லை என்றார்.

மதுரை ஆதீனம் போலீஸில் புகார் கொடுத்துள்ளாரா என்ற கேள்விக்கு, என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அவருக்கு எவ்வித பாதிப்பும், சங்கடமும் இருக்காது என்பது மட்டும் உறுதி என்றார்.

இனி நித்யானந்தா தியான பீடம் எங்கு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்ற கேள்விக்கு, நான் எனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன். நான் எங்கிருக்கிறேனோ அங்கு தலைமையிடமாகக் கொண்டு நித்யானந்தா தியான பீடம் செயல்படும். அருணகிரிநாதர் மீது எனக்குள்ள பக்தி, மரியாதை, அன்பு எல்லாம் எப்போதும் போல இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.