புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படாது: பொதுப்பணித்துறை அமைச்சர்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.

News image
Updated On :20 அக்டோபர் 2012, 9:43 am

ஜபலின் ஜான்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

கூடங்குளம் அணுஉலையை திறக்க தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியிருப்பது ஆதாரமற்றக் குற்றச்சாட்டு. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தியை தொடங்க மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுத்துள்ளது.

அங்கு நடத்தப்படும் போராட்டத்தால் மின்உற்பத்தி பாதிக்கப்படும் என்பது தவறான தகவல். தமிழகத்தில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு 1 சதவீதம் கூட உதவுவதில்லை. முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகளில் அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆதரவு குரல் கொடுக்கின்றனர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர்.

காவிரி பிரச்னையில் கூட மத்திய அரசு தமிழகத்துக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை. தமிழக முதல்வர் வழக்குத் தொடர்ந்ததால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், அங்கிருந்து மின்சாரம் கொண்டுவரும் தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்திய மின்தொகுப்பில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டிய நிலையில் இப்போது 400 முதல் 700 மெகாவாட் வரை தான் மின்சாரம் வழங்கப்படுகிறது.

காற்று வீசும் வேகம் குறைந்தது, நீர்மின் அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருப்பது போன்றவை தான் மின்வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம். தமிழகத்தில் மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்க வாய்ப்பு இல்லை.

26 மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால்தான் மணல் விலை ஏறியது. இன்னும் சில வாரங்களுக்குள் மேலும் 36 குவாரிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.