சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திண்டுக்கல் சிறை வளாகத்தில் கைதி படுகொலை

திண்டுக்கல், செப்.7: திண்டுக்கல் மாவட்ட சிறை வளாகத்தில் கைதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் ஆர்வி நகரைச் சேர்ந்தவர் ஜாபர் என்ற ஜாஹிர் உசேன். இவ

Updated On :26 செப்டம்பர் 2012, 6:17 am
திண்டுக்கல், செப்.7: திண்டுக்கல் மாவட்ட சிறை வளாகத்தில் கைதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ஆர்வி நகரைச் சேர்ந்தவர் ஜாபர் என்ற ஜாஹிர் உசேன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு கொலை முயற்சி வழக்கில் இவரை ஜே.எம்.2 நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் பழிக்குப் பழியாக எதிர்த் தரப்பினர் சிலர், ஜாபர் சிறையில் இருந்து வெளிவந்த போது, அவரை சிறை வளாகத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் தலையைத் துண்டித்து உடலை சிறை வாயிலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கண்ணிமைக்கும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதை அடுத்து, போலீஸ் எஸ்பி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.