பொள்ளாச்சி, செப்., 20 : பொள்ளாச்சி, குமரன் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் (40) பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி பிரமிளா (35) தனது மகள்களான சித்ரா (13) கவிதா (12) வேதிகா (11) ஆகியோரை பொள்ளாச்சி நேதாஜி சாலையில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இவர்கள் நால்வரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆம்னி வேன் இவர்கள் மீது மோதியது. இதில் பிரிமிளா, சித்ரா, கவிதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மூவருக்கும் கையில் எலும்பு முறிவும், பிரமிளாவுக்கு தலையில் பலத்த அடியும் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் மூவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக இவர்கள் கோயம்பத்தூர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.