/

பொள்ளாச்சி ஜமீன்கொட்டாம்பட்டி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி,  செப்., 24 : பொள்ளாச்சியில் ஜமீன்கொட்டாம்பட்டி கிராமத்தில் குடீநீர் வருவதில்லை, தெருவிளக்கு எரிவதில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:20 am

பா. இளையபதி

பொள்ளாச்சி,  செப்., 24 : பொள்ளாச்சியில் ஜமீன்கொட்டாம்பட்டி கிராமத்தில் குடீநீர் வருவதில்லை, தெருவிளக்கு எரிவதில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து இன்று காலை ஜமீன்கொட்டாம்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று வால்பாறை சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அங்கு  வந்த பொள்ளாச்சி டிஎஸ்பி பாலாஜி மக்களிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.