சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கட்சிதான் முக்கியமே தவிர தனி நபர்கள் அல்ல: ஜெகதீஷ்ஷெட்டர்

உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறேன். பிரசாரத்தின்போது மக்கள் உற்சாகமாக கலந்துகொள்வதை

News image
Updated On :1 மார்ச் 2013, 12:42 pm

உள்ளாட்சி தேர்தல் முடிந்தபிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஹாவேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறேன். பிரசாரத்தின்போது மக்கள் உற்சாகமாக கலந்துகொள்வதை கவனித்தால், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பாஜக செயல்படுத்தியுள்ள திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர் சட்டப்போராட்டத்தில் ஈடுபடும். இந்த விவகாரத்தை கட்சி பேதமின்றி நாடாளுமன்றத்தில் எழுப்பவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்களை கேட்டுக்கொண்டுள்ளேன். பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பதை கட்சி மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும். கட்சிதான் முக்கியமே தவிர, தனிநபர்கள் அல்ல. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து கட்சி மட்டத்தில் ஆலோசித்துமுடிவெடுப்போம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.