சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சூரிய மின் சக்தி வசதியுடன் ரேஷன் கடைகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

பொது மக்கள் ரேஷன் கடைகளை எளிதில் அணுகி பொருட்களை சிரமமின்றி பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே ரேஷன் கடைகளை அமைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணி

Updated On :1 மார்ச் 2013, 1:27 pm

சூரிய மின் சக்தி வசதியுடன் கூடிய ரேஷன் கடைகள் உள்பட உணவுத் துறை தொடர்பான பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் இந்தக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்:

பொது மக்கள் ரேஷன் கடைகளை எளிதில் அணுகி பொருட்களை சிரமமின்றி பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே ரேஷன் கடைகளை அமைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் சென்னை திருவேற்காட்டில் ஒரு ரேஷன் கடையும், வில்லிவாக்கத்தில் 2 கடைகளும், வியாசர்பாடியில் 3 கடைகளும் என மொத்தம் ரூ.29.25 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தி வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆறு ரேஷன் கடைகளுக்கான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

விவசாயிகள் அறுவடைக் காலங்களில் தாங்கள் விளைவித்த நெல்லை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், போதுமான அளவு நெல்லை பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்ய ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம்-வெட்டுவாக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் -கச்சநகரம், இளந்தோப்பு, சீயத்தமங்கை, அகரஓரத்தூர் ஆகிய இடங்களில் ரூ.1.35 கோடி மதிப்பில் சூரிய மின் சக்தி வசதியுடன் கட்டப்பட்டுள்ள 9 நேரடி நெல்முதல் நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.மேலும், ரூ.88.77 லட்சத்தில் கட்டப்பட்ட சென்னை ஆயிரம்விளக்கு மண்டல உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையரக அலுவலகக் கட்டத்தையும் அவர் திறந்தார்.

பொது விநியோகத் திட்டத்தில் விநியோகம் செய்வதற்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் சேமித்து வைக்க கிடங்கு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் சிவாயத்தில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு மற்றும் சென்னை தங்கசாலையில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தலா ஆயிரத்து 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கிடங்குகள் என மொத்தம் ரூ.3.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உணவுத் துறை செயலாளர் நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.