ஹைதராபாதில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிடிபட்டவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியது.
ஹைதராபாதில் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தில்சுக் நகரில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர்; 119 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சையது மக்பூல், இம்ரான் கான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புணேயில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றத்திடம் தேசிய புலனாய்வு அமைப்பு கோரியிருந்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டது.
இதையடுத்து சையது மக்பூல், இம்ரான் கான் ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பினர் ஹைதராபாதுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இதன் பின்னணியில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கல் உத்தரவின்படி கடந்த ஆண்டு ஜூலை தில்சுக் நகருக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர்.
ரியாஸ் பட்கலின் திட்டப்படியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அவர்களிடமிருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



