வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால்

Updated On :2 மார்ச் 2013, 4:52 am IST

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மெஹ்மூத் ஜன் அப்ரிடி, "இன்டேக்ஹப்' நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தார். பத்திரிகைத் துறையில் 20 ஆண்டு அனுபவம் மிக்க இவர், வெள்ளிக்கிழமை மாலை, காலத் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது திட்டமிட்ட கொலை என்று காவல்துறை துணை ஆணையர் அகமது பஸாய் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மிரான்ஷா பகுதியில் மாலிக் முஸ்தாஸ் என்ற செய்தியாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவங்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.