வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஐ.ஏ.எஸ் தேர்வுகளை தமிழிலேயே எழுதிட அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, பட்டப்படிப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.இதன் காரணமாக

News image
Updated On :11 மார்ச் 2013, 8:02 pm IST

தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, பட்டப்படிப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் ஆங்கில வழி பட்டப்படிப்புகளில் தேர்வுபெற்றிருந்தாலும்ஆங்கிலமொழியில் தேர்வுகளை எழுதுவது கடினமாக இருக்கலாம் என்று எண்ணி தங்கள் தாய்மொழியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளை எழுத விரும்பினால் அதற்கு தடைவிதிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளவியலாது.வரலாறு, புவியியல் போன்ற விருப்பப்பாடங்களை யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலையில் தமிழ் இலக்கியம் படிப்பிற்கு மட்டும் புது ஆணையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது,அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இம் மாதிரியான கட்டுப்பாடுகள் ஏதும் பிற மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புது ஆணையின்படி தமிழக கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.எனவே இது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் எம்மொழியைபயிற்று மொழியாக கொண்டிருந்தாலும் அனைவரும் ஐ.ஏ.எஸ் போன்ற முதன்மை தேர்வுகளை தமிழிலேயே எழுதிட அனுமதி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்,ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தலாமே அல்லாமல் புதுகட்டுப்பாடுகளை கொண்டு வருவது சரியல்ல என்றும், மேற்கண்ட அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும் மத்திய கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.