வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஒலிம்பிக்கில் மல்யுத்தம் நீக்கப்பட்ட விவகாரம்: மக்களவையில் ஜிதேந்திர சிங் கருத்து

"ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 70 நாடுகளும் மல்யுத்த விவகாரம் குறித்து பிரச்னையை கையிலெடுக்க வேண்டும். அதற்காக அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை ஈடுபடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று

Updated On :11 மார்ச் 2013, 6:10 pm IST

மல்யுத்தத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.

"ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 70 நாடுகளும் மல்யுத்த விவகாரம் குறித்து பிரச்னையை கையிலெடுக்க வேண்டும். அதற்காக அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை ஈடுபடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.மக்களையில நடைபெற்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.

"2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தை மீண்டும் சேர்க்கும் நடவடிக்கையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழமையான விளையாட்டான மல்யுத்தம் நீக்கப்பட்டது எந்த அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு நன்கு உணர்ந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.