வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

2026 உலகக் கோப்பைப் போட்டியில் நான்கு இந்திய வீரர்கள்!

கால்பந்தின் மிகப்பெரிய உலகத் திருவிழாவான 2026 பிஃபா உலகக் கோப்பைக்கான போட்டிகள் துவங்கிவிட்ட நிலையில், அதில் பங்கேற்கும் நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:01 am IST

கால்பந்தின் மிகப்பெரிய உலகத் திருவிழாவான 2026 பிஃபா உலகக் கோப்பைக்கான போட்டிகள் துவங்கிவிட்ட நிலையில், அதில் பங்கேற்கும் நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா பங்கேற்க இயலாமல் போய்விட்டது.

கால்பந்தாட்டத்தில் இந்திய இளைஞர்களுக்கு அதீத ஈடுபாடு இருந்தபோதிலும், இந்தியா இதுவரை ஆண்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை. என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் களமிறங்குகிறார்கள் என்னும் செய்தி உலகக் கால்பந்து அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை பதிவு செய்துள்ளது.

பிஃபா உலகக் கோப்பையில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தஹ்சின் முகமது ஜம்ஷித். பத்தொன்பது வயதிலேயே, கத்தாரின் 26 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

தஹ்சினின் பூர்விகம் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர். கத்தாரின் தோஹாவில் பிறந்த தஹ்சின், தொழில்முறை கால்பந்து வீரராக 'அல்-துஹைல்' அணிக்காக விளையாடி வருகிறார். உலகக் கால்பந்து போட்டியில் விளையாடும் 'முதல் கேரளர்' என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.

தஹ்சின் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பதுடன், கத்தார் 'மிஷன் பாஸ்போர்ட்'டையும் வைத்துள்ளார்.

இதில் 'மிஷன் பாஸ்போர்ட்' என்பது வெளிநாட்டில் பிறந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் கத்தாரைப் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்கும் ஒரு சிறப்பு ஆவணமாகும்.

தஹ்சினின் தந்தையான ஜம்ஷித் தச்சன்கண்டி, தனது மர வணிகத்தையும், காயம் காரணமாக பாதியில் நின்ற கால்பந்து விளையாட்டு வாழ்க்கையையும் விட்டுவிட்டு, 1996-இல் தனது மனைவி ஷைமாவுடன் தோஹாவுக்குக் குடிபெயர்ந்தார். தச்சன்கண்டி 1985 -இல் கேரளத்தின் சப்-ஜூனியர் அணியில் ஆடிக் கொண்டிருந்தார்.

Story image

கத்தார் நாட்டின் முதன்மை தேசிய அணியில் விளையாட தஹ்சினுக்கு அழைப்பு வந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் தஹ்சின் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். கத்தாரின் புகழ்பெற்ற 'ஆஸ்பயர் ஃபுட்பால் அகாதெமி' மூலம் தஹ்சினின் கால்பந்துப் பயணம் தொடங்கியது.

2021-இல் கத்தாரின் 16 வயதுக்குள்பட்டோர் தேசிய அணியில் இடம்பிடித்ததன் மூலம் அவர் முதன்முதலில் கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து அந்நாட்டின் இளையோர் அணிகளில் படிப்படியாக முன்னேறினார்.

அவரது சிறப்பான ஆட்டத்திறன், கத்தார் ஸ்டார்ஸ் லீக்கின் முன்னணி கிளப்களில் ஒன்றான 'அல் துஹைல்' அணியில் சேரும் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. தஹ்சின் சிறந்த 'விங்கர்' வீரராக உருவெடுத்துள்ளார்.

பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த பஞ்சாபி பெற்றோருக்கு நியூசிலாந்து ஆக்லாந்தில் பிறந்த சர்ப்ரீத் சிங், கால்பந்தாட்டத்தில் நடுகள வீரராக விளையாடி வருகிறார். பேயர்ன் முனிச் அணிக்காகவும் விளையாடி வந்த சர்ப்ரீத் சிங், தற்போது ஏ-லீக்கில் இடம் பெற்றுள்ளார்.

மெல்போர்னில் 2001 மே 7 -இல் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளை, ஆஸ்திரேலிய கால்பந்தாட்டத்தின் நம்பிக்கையாக மாறியுள்ளார். மலேசிய மற்றும் இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த தந்தைக்கும், ஆங்கிலோ இந்தியப் பின்னணியைக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் நிஷான்.

ஐந்து வயதில் கால்பந்தாட்டத்தில் ஈர்க்கப்பட்ட நிஷான், 2019 -இலிருந்து தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக மாறிவிட்டார். 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் போது சீனாவுக்கு எதிரான போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய நிஷான், கோல் அடிக்க, உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிஷான் தற்போது ஆஸ்திரேலிய தேசிய அணி மற்றும் மெல்போர்ன் விக்டரி அணிக்காக விளையாடி வருகிறார்.

பிரான்சில் பிறந்த சாமுவேல் மொட்டெளசாமி (மொட்டைசாமி), டி.ஆர். காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். காங்கோ தாய்க்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தோ-குவாடலூப்பிய தந்தைக்கும் மகனாவார். சாமுவேல் சர்வதேச அளவில் டி.ஆர். காங்கோ அணிக்காக விளையாடுகிறார்.