பிரதமர் மன்மோகன்சிங் குறித்த விமர்சனங்களை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.பென்சன், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கை சோனியாகாந்தி குடும்பத்தின் இரவுகாவலர் என்று நரேந்திரமோடி விமர்சித்துள்ளதை கடுமையாக ஆட்சேபித்துள்ள பென்சன், நோட்டீஸ் கிடைத்த 3 நாள்களுக்குள் இந்த விமர்சனத்தை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். இதை செய்ய தவறும்பட்சத்தில் பெங்களூர் தலைமை மாநகர மேஜெஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனியார் புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை பொது இடத்தில் நரேந்திரமோடி அவமானப்படுத்தி, தரம்தாழ்த்தி, களங்கப்படுத்திவிட்டதாக பென்சன், நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல்!

எடப்பாடி எதிரொலி! வேட்பாளர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறதா தவெக?

உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்!

ஆனந்த் அம்பானி பிறந்த நாள்! 9 கேரள கோயில்களுக்கு ரூ. 22.5 கோடி நன்கொடை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

