இளம்பெண்ணுக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்து மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பெண்ணின் தாயார் எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகார் மனுவில்:-
என் மகளுக்கு 22 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை. பல இடங்களில் மாப்பிள்ளை தேடிவந்தும் பலனில்லை. இந்நிலையில் வேலூர் அடுத்த சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றம்) அவரது குடும்பத்தினருடன் பெண் கேட்டு மார்ச் மாதம் என் வீட்டுக்கு வந்தனர். மாப்பிள்ளை சுயதொழில் செய்து கைநிறைய சம்பாதிப்பதாகவும், அதனால் உங்கள் பெண் நல்லமுறையில் வாழ்வாள் என் கூறினர். மேலும் சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மகேசுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்றார். இதனையடுத்மகேசுக்கும் திருமணம் நடந்தது.அன்று இரவு நடந்த முதரலிரவில் மகேஷ் திருநங்கை என்பது என் மகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சில நாட்கள் நரக வாழ்க்கை அனுபவித்த என் மகள் அவருடன் வாழ முடியாது என கூறி என் வீட்டுக்கே வந்து விட்டார்.
இதை தொடர்ந்து மகேஷ் மற்றும் அவரது அண்ணன்களிடம் நியாயம் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே திருநங்கைக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க துணையாக இருந்த மகேஷ் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து திருமண செலவு தொகை ரூ.3 லட்சமும், சீர்வரிசைப் பொருட்களையும் மீட்டு தர நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.இது குறீத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்

வெள்ளோட்டம் வெல்லட்டும்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


