கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தனியார்  நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 2 1/2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த

Updated On :21 ஏப்ரல் 2013, 4:30 pm IST

திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த திருப்பூர் வடக்கு தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த துணிகள், தையல் எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ. 2 1/2 கோடி இருக்கும் எனத் தெரிகிறது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.